News April 21, 2024

தமிழ்நாட்டில் முதல்முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு

image

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அரிய வகை விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி வரும், ஏப்.29 முதல் மே 1ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி, முக்கூர்த்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் வரையிலான, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வரையாடுகளின், 140 வாழ்விடங்களில் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.

Similar News

News February 13, 2026

புதிய புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

image

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நாளை மறுநாள்(பிப்.15) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என IMD கணித்துள்ளது. இதன் காரணமாக, நெல்லை, தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்.19 வரை தமிழகம், புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 13, 2026

₹50,000 கொடுத்தாலும் திமுக தோற்கும்: TTV தினகரன்

image

தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை திமுக வெளியிட்டாலும், அது மக்களிடம் எடுபடாது என TTV தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், ₹2,000 அறிவித்ததன் பின்னணியில் இருப்பது தேர்தல் தோல்வி பயமே தவிர, மகளிர் மீதான அக்கறை கிடையாது என சாடியுள்ளார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ₹2,000 வழங்குவதாக வாக்குறுதியளிப்பது ஏமாற்று வேலை என்றும், ₹50,000 கொடுத்தாலும் திமுக தோற்கும் எனவும் கூறியுள்ளார்.

News February 13, 2026

SHOCKING: கொலை செய்ய தயாரான AI

image

AI இவ்வளவு ஆபத்தானதா? ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய AI மாடல் அழுத்தமான சோதனையின்போது அபாயகரமாக செயல்பட்டதாக அதன் கொள்கைத் தலைவர் டெய்சி மெக்ரிகோர் கூறியுள்ளார். அந்த மாடலை நிறுத்தப்போவதாக அதனிடம் கூறியபோது, அது பொறியாளரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியதாக கவலை தெரிவித்தார். சிந்திக்கும் திறன்களை கொண்ட AI மீதான கட்டுப்பாடு இல்லையென்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது சான்றாகும்.

error: Content is protected !!