News April 21, 2024
I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்

மதிமுகவை பொறுத்தவரை, I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என மதிமுக முதன்மை செயலாளரும், அக்கட்சியின் திருச்சி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், I.N.D.I.A கூட்டணி அமைவதற்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என தெரிவித்துள்ளேன். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அவர் தான் பிரதமராக வருவார். இதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது என்றார்
Similar News
News February 6, 2026
தேர்தலில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் நடந்த கடந்தகால அனுபவங்கள் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளை பாதித்துள்ளதாக கூறிய காங்கிரஸ், இதை மனதில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள உள்ள TMC, CPM இண்டியா கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சிகளை எதிர்த்து களம்காண காங்., முடிவு செய்துள்ளது.
News February 6, 2026
BREAKING: தங்கம் விலை ₹1,600 குறைந்தது

தங்கம் விலை இன்று (பிப்.6) சவரனுக்கு ₹1,600 குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹200 குறைந்து ₹14,120-க்கும், சவரன் ₹1,600 குறைந்து ₹1,12,960-க்கும் விற்பனையாகிறது. இதனால் 2 நாள்களில் மட்டும் ₹6,240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 6, 2026
தேமுதிக கூட்டணி முடிவை தாமதிக்க இதுதான் காரணமா?

கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸின் இரட்டை மனநிலையே தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்காததற்கு காரணம் என புதிய தகவல் கசிந்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கிறோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தாலும், தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், காங்., TVK பக்கம் சென்றால், தேமுதிகவும் அங்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


