News April 21, 2024

சிறை உணவில் கலக்கப்பட்ட டாய்லெட் கிளீனர்!

image

தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் அளிக்கப்பட்ட உணவில், கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலந்திருந்ததாக நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு வழக்குகளில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரானின் முறையீட்டை தொடர்ந்து, இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள்

image

மன அழுத்தத்தில் இருந்து நாம் விரைவாக வெளியில் வரவில்லை என்றால் அது தற்கொலை வரை செல்லும் அபாயம் உள்ளது. மேலும் அது உடல் ஆரோக்கியத்தையும் பலவீனமான நிலையையும் உண்டு செய்யலாம். மன அழுத்தம் இருப்பதை உணரும் போது உடனடியாக அதை குறைக்க தேவையான விசயங்கள் நாம் செய்ய வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளின் மூலமாகவும் அதை குறைக்கலாம். அப்படியான உணவுகளின் லிஸ்ட்டை மேலே SWIPE செய்து பாருங்கள். SHARE IT

News November 17, 2025

கால்பந்து உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி தகுதி

image

2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதி சுற்​றில் போட்டியில் நேற்று போர்ச்சுகல் அணி அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி போர்ச்சுகல் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது. இதனால் 9 – 1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு அந்த அணி தகுதி பெற்றது. கடந்த போட்டியில் ரெட் கார்டு பெற்றதால் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்த போட்டில் பங்கேற்க முடியவில்லை.

News November 17, 2025

வரலாற்றில் இன்று

image

1920 – நடிகர் ஜெமினி கணேசன் பிறந்ததினம்
1928 – விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் மறைந்த தினம்
1972 – நடிகை ரோஜா செல்வமணி பிறந்த தினம்
1982 – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பிறந்தநாள்
1993 – நைஜீரியாவில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

error: Content is protected !!