News November 16, 2025

மீண்டும் பிஹார் CM ஆகிறாரா நிதிஷ்?

image

நிதிஷ்குமாரையே பிஹார் CM நாற்காலியில் அமரவைக்க NDA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும், இதில் PM மோடி மற்றும் பாஜக CM-கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும், DCM-மாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

Similar News

News November 16, 2025

கம்பீரை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்

image

சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இந்திய அணி ஆடியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் நன்றாக ஆடினாலும் குல்தீப், ஜடேஜா, அக்‌ஷர் இருக்கையில் அவர் 4-வது சுழற்பந்து வீச்சாளராக ஆட காரணம் என்னவென்று ரசிகர்கள் கேட்கின்றனர். மேலும், ஒன் டவுனில் விளையாடி வந்த சாய் சுதர்சனை நீக்கியதன் காரணத்தையும் கம்பீர் தெளிவுபடுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News November 16, 2025

12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள்

image

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதன்படி, எந்தெந்த பாடத்தின் தேர்வுகள், எந்த தேதிகளில் நடைபெறுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை, ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருப்பதால் சீக்கிரம் தயாராகுங்கள் மாணவர்களே! SHARE

News November 16, 2025

தேஜஸ்வி யாதவ் செருப்பால் அடிக்க வந்தார்: ரோஹிணி

image

லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி கொடுத்ததை பற்றி வீட்டில் <<18296664>>சண்டை<<>> வெடித்ததாக அவரது மகள் ரோஹிணி தெரிவித்துள்ளார். சண்டையின்போது, தேஜஸ்வி யாதவ் தன்னை கொச்சையாக பேசியதாகவும், செருப்பால் அடிக்க வந்ததாகவும் ரோஹிணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னுடைய கண்ணியத்தை காக்கவே குடும்பத்தையும், அரசியலையும் விட்டு விலகுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், ரோஹிணியின் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

error: Content is protected !!