News April 21, 2024

அரசியலமைப்பு அவர்களுக்கு வெறும் காகிதம்தான்

image

பாஜகவினருக்கு அரசியலமைப்பு என்பது வெற்று காகிதத் துண்டுதான் என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கேரளாவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து போராடியவர்களை, பயங்கரவாதி என பாஜக முத்திரை குத்தியது. நமது உரிமையை நிலைநாட்ட அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி தொடர்ந்து போராடுகிறோம். அனால், அதை அவர்கள் மதிப்பதில்லை என சாடியுள்ளார்.

Similar News

News August 18, 2025

பொங்கல் ரேஸில் விஜய், சூர்யா, SK..!

image

விஜய்யின் ஜனநாயகன் படம், 2026 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் அதேநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியாகவிருப்பதாக கூறப்பட்ட சூர்யாவின் கருப்பு படம் தள்ளிப்போகிறதாம். ஓடிடி உரிமை இன்னும் விற்பனையாகாததால், படம் பொங்கலுக்குதான் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய், சூர்யா, SK மோதலில் யார் வெல்வார்?

News August 18, 2025

ஏர்டெல் ஆஃபர்.. இனி இசை மழையில் நனையலாம்!

image

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர் கொடுத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். APPLE MUSIC சேவையை 6 மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது. MY AIRTEL APP-ல் சென்று வாடிக்கையாளர்கள் இதனை உறுதி செய்து கொள்ளலாம். 6 மாதத்திற்கு பிறகும் இந்த சேவையை தொடர விரும்பினால், மாதம் ₹119 கட்டணம் செலுத்த வேண்டும். இசை மழையில் நனைய தயாரா..!

News August 18, 2025

மானியத்துடன் ₹1 கோடி கடன் திட்டம் நாளை தொடக்கம்

image

முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30% மானியத்துடன் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற www.exwel.tn.gov.in இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், பயனாளிகளுக்கு கடன் வழங்கும் வகையில் திட்டத்தை நாளை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

error: Content is protected !!