News November 16, 2025

விஜய் வந்தால் சந்தோஷம்: ஆண்ட்ரியா

image

One last film, one last dance என ‘ஜனநாயகன்’ விஜய் ரசிகர்களுக்கு கடைசி திரை விருந்தாக அமையவுள்ளது. அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் மீண்டும் சினிமாவிற்குள் வரலாமா என்று ஆண்ட்ரியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, விஜய் வந்தால் சந்தோஷம், வரவில்லையென்றாலும், அவர் எப்போதும் தளபதி தான் என்று பதிலளித்தார்.

Similar News

News November 16, 2025

தேஜஸ்வி யாதவ் செருப்பால் அடிக்க வந்தார்: ரோஹிணி

image

லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி கொடுத்ததை பற்றி வீட்டில் <<18296664>>சண்டை<<>> வெடித்ததாக அவரது மகள் ரோஹிணி தெரிவித்துள்ளார். சண்டையின்போது, தேஜஸ்வி யாதவ் தன்னை கொச்சையாக பேசியதாகவும், செருப்பால் அடிக்க வந்ததாகவும் ரோஹிணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னுடைய கண்ணியத்தை காக்கவே குடும்பத்தையும், அரசியலையும் விட்டு விலகுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், ரோஹிணியின் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

News November 16, 2025

11-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள்

image

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி, , டிச.10: தமிழ், டிச.12: ஆங்கிலம், டிச:15: இயற்பியல், பொருளாதாரம். டிச.17: கணிதம், விலங்கியல், வர்த்தகம். டிச.19: வேதியியல், கணக்கு பதிவியல். டிச.22: கணினி அறிவியல். டிச.23: உயிரியல், வரலாறு, தாவரவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருப்பதால் சீக்கிரம் தயாராகுங்கள் மாணவர்களே!

News November 16, 2025

6-9 வகுப்புகள்.. அரையாண்டு தேர்வு அட்டவணை

image

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. *டிச.15- தமிழ், டிச.16-ஆங்கிலம், டிச.17-விருப்ப மொழி, டிச.18-கணிதம், டிச.19-உடற்கல்வி, டிச.22-அறிவியல், டிச.23-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறையாகும்.

error: Content is protected !!