News November 16, 2025

பெரம்பலூர்: பட்டதாரி இளைஞர் தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (32), எம்.பி.ஏ பட்டதாரியான இவர் குடிமைப் பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். இந்த போட்டித் தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News November 16, 2025

பெரம்பலூர்: ட்ரோன் கேமராக்கள் பறக்க விட்டு ஆய்வு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய, சுரங்கத் துறையினர் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தினர். விதிமுறை மீறல்கள், சுற்றுச்சூழல் மீறல்கள் குறித்த புகார்கள் எழுந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

News November 16, 2025

பெரம்பலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

பெரம்பலூர்: ஆசிரியர் தகுதி தேர்வில் 181 ஆப்சென்ட்!

image

பெரம்பலூரில் அரசுப் பள்ளிகள் உட்பட நான்கு மையங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இன்று நடைபெற்றது. மொத்தம் 1238 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1057 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்வுப் பணியில், மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.

error: Content is protected !!