News November 16, 2025

புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

image

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நிறுவனத்தில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-12-2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News November 16, 2025

காரைக்காலுக்கு மிக கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 16, 2025

புதுச்சேரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

புதுவை: ஆன்லைனில் ரூ.6.5 கோடி மோசடி!

image

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆஷித்குமார், இவரது மொபைலுக்கு வந்த லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.6.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஆன்லைனில் ரூ.12.47 கோடி இருப்பதாக காட்டியது. ஆனால் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

error: Content is protected !!