News November 16, 2025

அரியலூர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <>இங்கே <<>>க்ளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

Similar News

News November 16, 2025

அரியலூர்: விபத்தில் பெண் தலைமை காவலர்!

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலைய பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெண் தலைமை காவலர் விபத்தில் காயம். பெரியதத்தூர் கிராமத்தில் இருந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கிட்டு வந்து வாகனத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்து அவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 16, 2025

அரியலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

அரியலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வு!

image

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், கயர்லா பாத், செந்துறை, கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் டெட் பேப்பர் 2 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர்.

error: Content is protected !!