News November 16, 2025
திருப்பூர்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

திருப்பூர் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News November 16, 2025
திருப்பூர்: டிகிரி படித்திருந்தால் அரசு வேலை!

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்புடன் MS-Office சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.14,100 முதல் ரூ.29,730 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 16, 2025
தாராபுரம் அருகே பரபரப்பு: தீக்குளித்து தற்கொலை!

திருப்பூர் தாராபுரம் அடுத்த மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும்பவர் கெளதம். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பாணுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த கெளதம், மதுபோதையில் பாணுப்பிரியாவின் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
News November 16, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், சேடர்பாளையம், ஏ.கத்தாங்கண்ணி, செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், முத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


