News April 20, 2024

மோடிக்கு வாக்கு கேட்ட வெளிநாட்டு பிரபலம்

image

இந்தியாவின் பிரதமராக மோடியை மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கும் வகையில் இந்தியர்கள் அவருக்கே வாக்களிக்கும்படி, அமெரிக்கப் பாடகியான மேரி மில்பென் கோரிக்கை வைத்திருக்கிறார். மோடி கடந்த வருடம் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர் முன்பாக இந்திய தேசிய கீதத்தை பாடி, மோடியை மெய்சிலிர்க்க வைத்தார். அதற்காக மில்பென்க்கு மோடி பாராட்டு தெரிவித்தபோது, மோடியின் பாதங்களைத் தொட்டு மில்பென் வணங்கினார்.

Similar News

News February 2, 2026

முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்

image

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், தவெக கொடியை விஜய் ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார். அப்போது 2026 தேர்தல் களப்பணி, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தேர்தல் வாக்குறுதி குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (1/2)

image

*சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் உள்ளிட்ட 7 அதிவேக ரயில் தடங்கள் அமைப்பு *மகளிர் தொழில் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில், SHE மார்ட் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைப்பு *சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு ₹10,000 கோடி நிதி ஒதுக்கீடு *புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்து வகைகளுக்கான இறக்குமதிக்கு முழு வரி விலக்கு *நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி ₹12.2 லட்சம் கோடியாக உயர்வு

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (2/2)

image

*தமிழகத்தில் அரியவகை கனிமங்களுக்கான வழித்தடம் *வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு வரி 2% ஆக குறைப்பு * நாடு முழுவதும் மாவட்டம் தோறும் பெண்களுக்கான விடுதி *மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க 5 மருத்துவ முனையங்கள் அமைப்பு *இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047-ம் ஆண்டு வரை வரி விலக்கு

error: Content is protected !!