News November 16, 2025

Op.Sindoor எதற்கும் உதவவில்லை: ஃபரூக்

image

டாக்டர்கள் டெல்லி குண்டு வெடிப்பில் ஈடுபட்டது ஏன், அவர்கள் இந்த பாதையை தேர்ந்தெடுக்க யார் காரணம் என ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறிய அவர், சிந்தூர் ஆபரேஷனால் ஒரு பிரயோஜனமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால், நமது நாட்டு மக்கள் 18 பேர்தான் பலியானார்கள் எனவும், எல்லை நாடுகளுடன் சமாதான பேச்சு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 16, 2025

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் இன்று காலை <<18301754>>வெடிகுண்டு மிரட்டல்<<>> விடுத்த பெண் சிக்கினார். அவர் சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த 34 வயதான ராதா என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ராதாவை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல ஹாஸ்பிடலில் அவரை சேர்க்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

News November 16, 2025

கூட்டணி பேச்சு: விஜய் கட்சி அதிகாரப்பூர்வ விளக்கம்

image

ராகுலுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தவெக நிர்வாகி அருண்ராஜ் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். ராகுலுடன் விஜய் பேசியதாக வெளியாகும் செய்தி வதந்தி எனக்கூறிய அவர், இதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், கூட்டணி தொடர்பாக விஜய் அனைத்து முடிவையும் எடுப்பார் என்றும் யாருடன் கூட்டணி என்பதில் நாங்கள் (பாஜக, திமுகவை தவிர) தெளிவாக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

News November 16, 2025

இனி பேங்க் வெப்சைட் இப்படித்தான் இருக்கும்!

image

பாதுகாப்பான பணப் பரிமாற்றத்திற்கும், நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கிலும் வங்கிகள் தங்களது டொமைன்களை ‘.bank.in’ என மாற்றியுள்ளன. இதன்படி, https://sbi.bank.in, https://www.hdfc.bank.in/ என்பது போல் டொமைன்கள் இருக்கும். இதனால் சைபர் மோசடிகள் தடுக்கப்படும் என RBI நம்புகிறது. இந்த டொமைன், RBI-ஆல் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதால் நம்பகத்தன்மையாக இருக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!