News April 20, 2024
20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்

கர்நாடகாவில் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ள நிலையில், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 28 இடங்களில் 25 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுகிறது.
Similar News
News February 9, 2026
குறை சொன்னால் மூளை பாதிக்கும்

அதிகமாக குறை சொல்வது, மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று stanford பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எப்போதும் விமர்சனம் செய்வது குற்ற உணர்வு, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றும், கவலை, பயம், தன்னம்பிக்கை குறைவு உருவாக காரணமாகிறது எனவும், சொல்லும் வார்த்தைகள் மற்றவரின் மனதை மட்டுமல்ல அவர்களின் மூளையையோ பாதிக்கும் எனவும் தெரியவந்துள்ளது. எனவே, மற்றவர்களிடம் பேசும்போது, கவனமாக பேசுங்க.
News February 9, 2026
எனக்கு இப்போது 20 வயது தான்: செங்கோட்டையன்

தவெகவில் இணைந்தபிறகு தனக்கு வயது 20 ஆக குறைந்துவிட்டது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏனென்றால், அக்கட்சியில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளதால் அவ்வாறே தானும் உணர்வதாக அவர் விளக்கமளித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், விஜய்யை தமிழக முதல்வராக மாற்றும் வரை ஓயப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
News February 9, 2026
தவெகவுடன் கூட்டணி பேசவில்லை: பாஜக

தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை என்று மத்திய இணை அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் இணை பொறுப்பாளருமான முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார். NDA கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கிறது. விரைவில் தீர்வு எட்டப்பட்டு, யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறிய அவர், திமுக ஆட்சியை வீழ்த்தி NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என்றார்.


