News April 20, 2024
ராமரை தரிசித்த ஜெனிலியா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் எனப் பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர், 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் தனது கணவர் மற்றும் மகன் உடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Similar News
News November 17, 2025
ரஜினி படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தில் இருந்து சுந்தர் சி தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த படத்தை யார் இயக்கு போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினி படத்தை தனுஷ் இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தனுஷ் இயக்குவது உறுதியானால் எந்த மாதிரி கதையை அவர் எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த காம்போ எப்படி இருக்கும்?
News November 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 17,கார்த்திகை 1 ▶கிழமை:திங்கள் ▶நல்ல நேரம்: 6.00 AM – 7.30 AM ▶ராகு காலம்: 7.30 AM – 9.00 AM ▶எமகண்டம்: 10.30 AM – 12.00 AM ▶குளிகை: 1.30 PM – 3.00 PM ▶திதி: திரையோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி ▶சிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம், ஸ்ரீ அன்னை நினைவு நாள்.
News November 17, 2025
சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கோல்மால் பாட் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போலீசாரும், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, நக்சல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 9 நக்சல்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.


