News November 16, 2025
திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வில் 576 பேர் ஆப்சென்ட்

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1, 14 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3951 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3375 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 576 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2, 51 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 15,286 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
Similar News
News November 16, 2025
திருச்சி: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள்,<
News November 16, 2025
திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

மணிகண்டம் அருகே நாகமங்கலத்தை சேர்ந்த லாரன்ஸ் மகன் ரோஷன் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ரோஷன் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோஷன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 16, 2025
திருச்சி: நண்பனை கொலை செய்த இருவர் கைது

மணப்பாறை அருகே கருணாநிதி என்பவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், எஸ்பி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இறந்தவரின் நண்பர்களான சூரகாலப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், கோட்டை கீழையூரை சேர்ந்த பூபதி ஆகியோர் முன்விரோதம் காரணமாக கருணாநிதியை கொலை செய்து பாலத்திற்கு அடியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று கொலையாளிகளை இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


