News November 16, 2025

பெரம்பலுர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய 600 கிறித்தவர்களுக்கு, மானியத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 550 பயணிகளுக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.60,000 வீதமும் மானியம் வழங்கப்படும். சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து 28.02.2026க்குள் சென்னை, சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

Similar News

News November 16, 2025

பெரம்பலூர்: பட்டதாரி இளைஞர் தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (32), எம்.பி.ஏ பட்டதாரியான இவர் குடிமைப் பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். இந்த போட்டித் தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News November 16, 2025

பெரம்பலுர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள்,<> இங்கே க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

News November 16, 2025

பெரம்பலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வு!

image

பெரம்பலூர் (நவம்16) நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தாள்-2 தகுதித் தேர்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில் பல்வேறு தேர்வு மையங்களில் நடைப்பெறுகிறது. பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், நடப்பு ஆண்டுக்காண ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

error: Content is protected !!