News November 16, 2025
45 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்,இன்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 67 புகார்கள் பெறப்பட்டு, 45 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
புதுவை: 2 வயது வரை தாய்ப்பால் அவசியம்!

புதுவை, ஜிப்மர் மருத்துவமனை குழந்தைகள் டாக்டர் ஆதிசிவம் விடுத்துள்ள செய்தியில், நவம்பர் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 1000 குழந்தை பிறப்பில் 24.9 பச்சிளம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இறந்து விடுகின்றன. இதனால் பிறந்த குழந்தைகளுக்கு 2 வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் புகட்ட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
News November 16, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நிறுவனத்தில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-12-2025 தேதிக்குள் <
News November 16, 2025
வில்லியனூர் அதிக குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி சாவு

புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் சதீஷ்( 38)
பெயிண்டர். இவர் தந்தை சேகர் (64)கூலி தொழிலாளி. இவரது குடி பழக்கத்தால் இவருக்கு ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய்
இருந்தது. இவர் சில நாட்களாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வராமல்
இருந்துள்ளார். இதனிடையே
தனியார் வணிக வளாகத்தில் சேகர்
இறந்து கிடப்பதாக சதீஷூக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


