News November 16, 2025
தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.
Similar News
News November 16, 2025
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு GOOD NEWS!

USA-வில் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்னையாக மாறிய நிலையில், அதிபர் டிரம்ப், பழங்கள், தேயிலை, உள்ளிட்ட பல உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரிகளை குறைத்துள்ளார். இது, இந்திய மாம்பழங்கள், மாதுளைகள், தேயிலை, மசாலா பொருள்களின் ஏற்றுமதிக்கு உதவும். இந்திய பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வரி குறைப்பால் இந்திய உணவு பொருள்களின் விலைகள் USA-வில் குறைய வாய்ப்புள்ளது.
News November 16, 2025
பிஹார் தோல்வி ஏன்? ஜன் சுராஜ் விளக்கம்

CM நிதிஷ்குமார் அரசு உலக வங்கியிலிருந்து கிடைத்த ₹14,000 கோடி நிதியை தேர்தலில் வெற்றி பெற பயன்படுத்திவிட்டதாக ஜன் சுராஜ் தேசிய தலைவர் உதய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதனை வைத்தே இலவசங்களை அறிவித்ததாகவும், இப்பணம் இல்லை என்றால் NDA தோற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜன் சுராஜ் வாக்காளர்களில் சிலர் RJD ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதென பயந்து NDA-க்கு வாக்களித்ததாகவும் பேசியுள்ளார்.
News November 16, 2025
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்கும் பணிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள், நேற்றுடன் (நவ.15) முடிவடைந்தன. இந்நிலையில், விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிச.15 முதல் ₹1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, விடுபட்ட நபர்களிடம் இருந்து உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


