News November 16, 2025
தனியார் பஸ் கட்டணம் உயரப் போகிறது

டீசல் விலை உயர்வு, அரசின் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை மாற்றி அமைக்க, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையின் போது, கட்டண உயர்வு தொடர்பாக 950 பரிந்துரைகள் வந்துள்ளதாகவும், இது குறித்து டிச.30-க்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இதையடுத்து, 2026 ஜன.6-ம் தேதி இறுதி முடிவை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
Similar News
News November 16, 2025
முதல் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது

கொல்கத்தா டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த தெ.ஆப்பிரிக்கா 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட்டிங் செய்த இந்தியாவும் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து, தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தெ.ஆப்பிரிக்க அணி, 2-ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. 63 ரன்கள் முன்னிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை தெ.ஆப்பிரிக்கா இன்று தொடங்கியுள்ளது.
News November 16, 2025
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பருவமழை காலங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வர். இதற்கான அவகாசம் நேற்றுடன் (நவ.15) முடிவடைந்தது. ஆனால், பல விவசாயிகள் பல்வேறு காரணங்களால் பயிர் காப்பீடு செய்யாததால், கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், நவ.30 வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
மாற்றி மாற்றி பேசிய கே.என்.நேரு

திருப்பதி கோயிலுக்கு ₹44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து கே.என்.நேரு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கோயிலுக்கு 44 லட்சம் கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்ற அவர், உறவினர் கொடுத்துவிட்ட பணத்தை கோயிலில் செலுத்தியதாக கூறியுள்ளார். முன்னதாக, நான் பணம் கொடுக்கக்கூடாதா என கோபமாக பேசியிருந்தார். இப்படி இவர் மாற்றி மாற்றி பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.


