News November 16, 2025

ஐசக் நியூட்டன் பொன்மொழிகள்

image

*ஒரு எளிய உண்மையைக் கண்டறிவதற்கு பல ஆண்டுகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். *நமக்குத் தெரிந்தவை ஒரு துளி அளவு, நமக்குத் தெரியாதவை ஒரு கடல் அளவு. *ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான எதிர்வினை உண்டு. *மேலே சென்றால் கட்டாயம் கீழே வர வேண்டும். *நான் எப்போதாவது மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தால், அது வேறு எந்த திறமையையும் விட அதிக பொறுமையாக கவனித்ததே காரணம்.

Similar News

News November 16, 2025

ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வி இல்லை: கவர்னர்

image

ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வியை கற்றுக் கொடுப்பதில்லை என கவர்னர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆதி திராவிட மாணவர்களுக்கான விடுதிகளும் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், இங்குள்ள பழங்குடி மக்களிடம், நான் ஒரு இந்தியன் என்பதற்கான ஒரு ஆவணம் கூட இல்லை; இது அவர்களை புறக்கணிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்

image

உங்களுக்குப் புதிய வாழ்க்கை தேவையில்லை. சில நல்ல பழக்கவழக்கங்கள் மட்டுமே தேவை. சிறிய, நிலையான செயல்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. என்ன பழக்கத்தை வழக்கமாக மாற்ற வேண்டும் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News November 16, 2025

தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

image

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.

error: Content is protected !!