News November 16, 2025
எல்லையற்ற காதலுக்கும் முடிவு உண்டு!

சீனாவில் 2017-ல் ஜான் என்ற பெண் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட, அவரை காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால், அவரை உயிருக்கு உயிராக நேசித்த அவரது கணவர், <<18299546>>cryopreservation என்ற முறைப்படி<<>> ஜானின் உடலை 30 ஆண்டுகள் பாதுகாக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார். ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது திருமணம் செய்துகொண்டார்.
Similar News
News November 16, 2025
வீரநடை போடும் டெம்பா பவுமாவின் படை

டெஸ்ட் கிரிக்கெட்டில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வீரநடை போட்டு வருகிறது. அவருடைய கேப்டன்சியில் தென்னாப்பிரிக்கா விளையாடிய 11 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. 10 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஏற்கெனவே, நடப்பாண்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற SA அணி, தங்கள் மீதான Chokers டேக்கையும் உடைத்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
விஜய்க்கு ஹிட் அடித்த 10 ரீ-மேக் படங்கள்

விஜய் நிறைய ரீ-மேக் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த பல ரீ-மேக் படங்கள், பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவை, பெரும்பாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ரீ-மேக்காக இருந்துள்ளன. அந்த படங்கள் எது என்று தெரியுமா? டாப் 10 ஹிட் படங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?
News November 16, 2025
தோல்விக்கு வீரர்களை சாடிய கவுதம் கம்பீர்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு திறனுடன் கூடிய மனவலிமை தேவை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன்கள் இலக்கானது எளிதில் துரத்திப் பிடிக்க கூடியதே என்று அவர் கூறியுள்ளார். சுழலுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடுவதற்கு உத்தியும், நிதானமும் தேவை எனவும், சரியாக விளையாட தவறினால் தோல்வியே ஏற்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.


