News November 15, 2025

தூய்மை பணியாளர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி

image

தூய்மை பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்கவே, அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியுள்ளதாக அன்புமணி சாடியுள்ளார். 107 நாள்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு, திமுக அரசு இதுவரை முன்வரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களது பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமாறும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 16, 2026

தமிழ் நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

image

நடிகை பிரதியுஷா மரண வழக்கில் கோர்ட் உத்தரவை அடுத்து, அவரது காதலன் சித்தார்த் சரணடைந்துள்ளார். சித்தார்த்துக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை SC உறுதி செய்ததை அடுத்து, இன்று அவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் பிரதியுஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2026

இந்தியா வந்தடைந்தது LPG கப்பல்

image

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே LPG எரிவாயுவை ஏற்றி வந்த சிவாலிக் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக இன்று இந்தியா வந்ததடைந்தது. கத்தாரிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், ஆபத்தான ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால், நாடு முழுவதும் நிலவி வரும் LPG தட்டுப்பாடு விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 16, 2026

IPL 2026: கேப்டன் ஆனார் அபிஷேக் சர்மா!

image

SRH அணியின் புதிய கேப்டனாக அபிஷேக் சர்மா பொறுப்பேற்க உள்ளார். பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா இடைக்கால கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. T20 WC-ஐ தவறவிட்ட கம்மின்ஸ் முழுமையாக குணமடைய இன்னும் 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!