News November 15, 2025
ஆஸ்கர் போட்டியில் பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி பிலிம்ப்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு, ‘தலித் சுப்பையா-வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிரிதரன் இதை இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
அதிக வாக்கு வாங்கியும் RJD தோற்றது ஏன்?

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் RJD 25 தொகுதிகளில் மட்டுமே வென்றாலும் வாக்கு சதவீதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளில் RJD (23%), BJP (20.08%), JD(U) (19.25) வாக்குகள் கிடைத்துள்ளன. பல தொகுதிகளில் 2-வது, 3-வது இடம் பிடித்த RJD வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெறவில்லை. மேலும், BJP மற்றும் JD(U) தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், RJD 143 தொகுதிகளில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
ஜீன்ஸ் பேண்டில் கறையா? இனி கவலை வேண்டாம்

ஜீன்ஸ் பேண்டை பொதுவாக துவைப்பதே கடினம், அதுவும் அதில் இருக்கும் கறையை நீக்குவது பெரும் சிரமம். முக்கியமாக மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இது பெரும் தலைவலியாய் இருக்கும். அனால், எளிதாக ரத்தக் கறை உட்பட அனைத்தையும் நீக்க ஒரு வழி இருக்கு. அதற்கு ஒரு சிறிய பெளலில் உப்பைச் சேர்த்து அதில் 2 மூடி அளவுக்கு சோடா ஒன்றை ஊற்றி மிக்ஸ் செய்து விடுங்கள். உடனடியாக கறைகள் மறைந்துவிடும். SHARE IT
News November 16, 2025
ராசி பலன்கள் (16.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


