News November 15, 2025
BREAKING: CSK-வில் 10 வீரர்கள் விடுவிப்பு.. கையில் ₹43.9 கோடி

ஐபிஎல் 2026 சீசனையொட்டி, CSK அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி, மதீஷா பதிரானா, ரச்சின், டேவன் கான்வே ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ராஜஸ்தானுக்கு ஜடேஜா, சாம் கரன் டிரேட் செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து, CSK அணியால் ஏலத்தில் ₹43.9 கோடி செலவு செய்ய முடியும்.
Similar News
News November 15, 2025
நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான தவெக

EC கூட்டங்களில் தவெகவிற்கு அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியிருந்தார். இதில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கோயம்பேட்டில் உள்ள மாநில EC முகவரிக்கு தவெகவினர் அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அலுவலகம் தலைமை செயலகத்தில் உள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டி தவெகவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
News November 15, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

திமுக, பாஜக கட்சியை தவிர பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு ரெடி என தவெக முக்கியத் தலைவரான அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், தே.ஜ.கூட்டணியில் விஜய்யை இணைக்க திட்டமிட்டு இபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார். தவெகவை மனதில் வைத்தே ஜனவரியில் மெகா கூட்டணி அமையும் என அவர் அறிவித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரள விஜய் பச்சைக்கொடி காட்டுவாரா?
News November 15, 2025
உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளர..

➤தோல்விகளை கையாள்வது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள் ➤அவர்கள் எதை நினைத்து பயப்படுகிறார்கள் என கேட்டு, உதவுங்கள் ➤சோகமாக இருப்பதை Normalise செய்யுங்கள். அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள் ➤அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள் ➤மற்ற குழந்தைகளோடு உங்கள் பிள்ளையை ஒப்பிட்டு பேச வேண்டாம். அனைத்து பெற்றோர்களுக்கும் SHARE THIS.


