News November 15, 2025
பணம் கையில் நிற்க வேண்டுமா? இதை பண்ணுங்க…

இந்திய நடுத்தர வர்க்கம் அதிகம் சம்பாதித்தாலும் ஏன் எப்போதும் பணப் பற்றாக்குறையிலேயே இருக்கிறது என்று தெரியுமா? நாம் தெரிந்தோ, தெரியாமலோ பழகிய சில நிதி பழக்க வழக்கங்களே அதற்கு காரணம். உங்கள் நிதி கட்டுப்பாட்டை அதிகரித்து, உங்கள் பணத்தை சேமிப்பதற்கான சில வழிகளை மேலே SWIPE பண்ணி பாருங்க…
Similar News
News November 15, 2025
சரும அழகை பராமரிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

சருமம் அழகாக, பொலிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. அப்படி இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் *தேனை சாப்பிட்டால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் *வைட்டமின் C நிறைந்த பழச்சாறுகள் குடித்தால் சருமம் பொலிவடையும் *பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் சரும வறட்சி இருக்காது *பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. *இளநீர் அடிக்கடி குடித்தால் சுருக்கங்கள் ஏற்படாது.
News November 15, 2025
SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி

OnlineSBI, YONO Lite ஆகியவற்றில் நவ.30 முதல் mCASH சேவையை நிறுத்தவிருப்பதாக SBI வங்கி அறிவித்துள்ளது. ஒருவரின் செல்போன் எண் (அ) இ-மெயில் முகவரியை கொண்டு அவருக்கு பணம் செலுத்தும் வசதியே mCASH ஆகும். ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இனி பணம் அனுப்ப முடியும். அதேநேரத்தில், UPI(BHIM SBI Pay), IMPS, NEFT, RTGS உள்ளிட்ட மற்ற பரிவர்த்தனை முறைகளை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
News November 15, 2025
பிஹாரை போல TN-ல் வெல்ல முடியாது: வைகோ

சுயேட்சை வேட்பாளர்கள் அதிகம் போட்டியிட்டதால் தான் வாக்குகள் பிரிந்து, பிஹாரில் NDA கூட்டணி வெற்றி பெற்றதாக வைகோ கூறியுள்ளார். பிஹார் போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என NDA கூட்டணி நினைத்தால், அது நடக்காது என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய மோசடிதான் SIR என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


