News November 15, 2025
கள்ளக்குறிச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவாக புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு APPLY NOW!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <
News November 15, 2025
கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி – ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டுறவு வார விழாவில், தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாட்டு கேடயங்களை வழங்க உள்ளார். இந்த நிகழ்வு நவம்பர் 17-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.15) அறிவித்துள்ளார்.
News November 15, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா துவக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14-ம் தேதி முதல் வரும் 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நவம்பர் 14-ம் தேதி துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில், கூட்டுறவு கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.


