News November 15, 2025
குமரி: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

கடியப்பட்டினம் கல்லடி விளை தொழிலாளி வினோத்(31) நெய்யூரில் வேலை செய்தபோது, 22.5.2020 அன்று அப்பகுதி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்தார். மேலும் சிறுமியை கொன்று விடுவேன் என மிரட்டினார். குளச்சல் மகளிர்போலீசார் வினோத்தை கைது செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கில் நேற்று நீதிபதி சுந்தரய்யா வினோத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.6,000 அபராதம் விதித்தார்.
Similar News
News November 15, 2025
குமரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
குமரி: குடிப்பழக்கத்தால் இளைஞர் தற்கொலை

நாகர்கோவில் வடசேரி வாத்தியார் விளையை சேர்ந்தவர் அமல்ராஜ் (30) இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டில் சண்டை போட்ட அவர் வீட்டில் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அமல்ராஜ் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News November 15, 2025
குமரி: 10th முடித்தால் மத்திய அரசு பள்ளியில் வேலை உறுதி!

குமரி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <


