News November 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது.. செக் பண்ணுங்க

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 27-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மொத்தம் 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து உரிமைத் தொகைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கும் விரைவில் ₹1,000 வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
Similar News
News November 15, 2025
பாஜகவில் இருந்து Ex மத்திய அமைச்சர் இடைநீக்கம்

பிஹார் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற பாஜக இன்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி பிஹாரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தலைமை தெரிவித்துள்ளது. அதேபோல் அக்கட்சியின் MLC அசோக் அகர்வாலும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
News November 15, 2025
பிக்பாஸ்: வாட்டர் மெலன் திவாகர் வெளியேறினார்

சர்ச்சைகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸில் கடந்த வாரம் பிரவீனும், துஷாரும் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி டைட்டில் வின்னராவர் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட கனி பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரெட் கார்டு மூலம் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News November 15, 2025
பணம் கையில் நிற்க வேண்டுமா? இதை பண்ணுங்க…

இந்திய நடுத்தர வர்க்கம் அதிகம் சம்பாதித்தாலும் ஏன் எப்போதும் பணப் பற்றாக்குறையிலேயே இருக்கிறது என்று தெரியுமா? நாம் தெரிந்தோ, தெரியாமலோ பழகிய சில நிதி பழக்க வழக்கங்களே அதற்கு காரணம். உங்கள் நிதி கட்டுப்பாட்டை அதிகரித்து, உங்கள் பணத்தை சேமிப்பதற்கான சில வழிகளை மேலே SWIPE பண்ணி பாருங்க…


