News November 15, 2025

விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2025-26 ராபி பருவத்தில் வேளாண் பயிர்களுக்கு உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

விருதுநகர்: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

விருதுநகர்: நண்பரை கொலை செய்த 2 பேர் போலீசில் சரண்

image

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (33) அக். 29 முதல் காணவில்லை. இது தொடர்பாக அவரது தயார் அளித்த புகாரை அடுத்து, பாரதிராஜ் (35), விக்னேஷ் (34) ஆகிய மணிகண்டனின் நண்பர்கள் ஆவியூர் போலீசில் சரண் அடைந்தனர். விசாரணையில், கொடுக்கல் வாங்கல் தகராறில் மணிகண்டனை இருவரும் கொலை செய்து கொக்குளம் பாலத்தில் வீசியது தெரியவந்துள்ளது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

விருதுநகரில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்

image

விருதுநகர் மக்களே, வேளாண் சார்ந்த துறைகளில் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. புதிதாக துவங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும், ஏற்கனவே துவங்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் சந்தையை விரிவுபடுத்த ரூ.25 லட்சமும் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.agrimark.tn.gov.in பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!