News November 15, 2025
திருச்சி: இரும்பு குழாய்கள் ஏற்றி வந்த வாகனம் விபத்து

திருச்சி – திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் பகுதியில், இன்று அதிகாலை அதிக பாரம் ஏற்றிவந்த சரக்குவாகனம் பேரிகார்டு இருப்பது தெரியாமல், பிரேக் பிடித்தபோது, இரும்பு குழாய்கள் சாலையில் விழுந்து சிதறியது. பேரிகார்டு உள்ள பகுதியில் போதிய மின்வெளிச்சம் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என்பதால் பேரிகார்டு உள்ள பகுதியில், மின்விளக்கு ஏற்படுத்திடவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே… வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 15, 2025
திருச்சி: 21 லட்சம் படிவங்கள் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (நவ.14) மாலை வரை 21,09,778 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு, படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து பெறும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
திருச்சி: நகைகளை திருடிய ஓட்டுனர்

திருச்சி, கீழ வாளாடியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரது வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இந்நிலையில் சிந்துஜா தனது வீட்டில் தங்க நகை காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவர் லால்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்தபோது ஓட்டுநர் பிரபாகரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பிரபாகரனை கைது செய்து நகைகளை மீட்டனர்.


