News April 20, 2024
நாதக நிர்வாகியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் மாதவன். நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர், நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராகுல் உள்ளிட்ட 3 போ், மாதவனை வழிமறித்து, தேர்தல் முன்விரோதம் காரணமாக 3 பேரும் மாதவன் மீது தாக்குதல் நடத்தினர். புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார், ராகுல் உள்பட 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
கடலூர்: 1,246 மனுக்களை பெற்ற ஆட்சியர்

கடலூரில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,246 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 17, 2026
4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்: ஆட்சியர் தகவல்

2026 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி, பணிக்கன் குப்பம் அண்ணா பல்கலைக்கழகம், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
கட;லூர்: SBI வங்கி வேலை APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


