News November 15, 2025
தூத்துக்குடி: காதல் திருமணம் செய்தவர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி முத்தையாயாபுரத்தை சேர்ந்தவர் கார் டிரைவர் லட்சுமணன் (35). இவர் செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று முன்தினம் வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 18, 2026
தூத்துக்குடி: இனி Whats App மூலம் ஆதார் கார்டு.!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 18, 2026
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கு சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32). இவர் மீது ஏற்கனவே நாசரேத், திருநெல்வேலி மற்றும் மெய்ஞானபுரம் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த அவரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 18, 2026
துப்பாக்கி வைத்திருப்போருக்கு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதை அடுத்து படைக்கலன் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற படைகலன் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைத்து இருப்பு வைத்திட வேண்டும். தேர்தல் நடைமுறை முடியும் இந்த விதிமுறை நடைமுறையில் இருக்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


