News November 15, 2025

பெரம்பலூரில் TVK சார்பில் போராட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரவுபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பல்வேறு குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை (நவ.16) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கு அனுமதி கோரி எஸ்பி ஆதர்ஷ் பசேராவிடம், நேற்று (நவ.14) மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் மௌ அளித்தனர். இதில், தவெக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News

News November 15, 2025

பெரம்பலூர்: லாரியில் மோதி வாலிபர் பரிதாப பலி

image

அரியலூர் மாவட்டம், பொய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் குன்னம் அருகே தங்கநகரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியில் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 15, 2025

பெரம்பலூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், அரும்பாவூர் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வளர் இளம் பருவ மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் கல்வி மற்றும் நன்னெறிகள் குறித்து பேசப்பட்டது. இதில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா, பால்வினை நோய்கள் குறித்து உரையாற்றினார்.

News November 15, 2025

பெரம்பலூர் : கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

error: Content is protected !!