News November 15, 2025
திராவிட நெருப்பு டெல்லி வரை எரிகிறது: உதயநிதி

புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை என்று விஜய்யை, மறைமுகமாக உதயநிதி விமர்சித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு வரலாறு உள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். திராவிட நெருப்புதான் டெல்லி வரை எரிகிறது என்ற உதயநிதி, டெல்லியில் திமுக தான் எதிர்க்கட்சி என்பதால், SIR மூலம் பாஜக, தமிழகத்தை ஒடுக்க பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News March 25, 2026
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு திருவிக நகர் தொகுதியா?

ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு அவரின் மனைவி பொற்கொடி, புதிதாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி இணைந்துள்ள நிலையில், பொற்கொடிக்கு திருவிக நகர் தொகுதி ( தனி) ஒதுக்க EPS சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
News March 25, 2026
தங்கம் விலை.. நிபுணர்கள் சொல்வதென்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று 3% உயர்ந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் 4,544 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது வரும் நாள்களில் மேலும் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அத்துடன், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 2 நாள்களாக நல்ல ஏற்றம் கண்டுள்ளன. நேற்று போலவே இன்றும் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளை கடந்துள்ளது. இந்த வர்த்தக மாற்றத்தால் தங்கம் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
News March 25, 2026
கமல் தேர்தலில் இருந்து விலக இதுதான் காரணமா?

வரும் தேர்தலில் மநீமவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியது. இதனை மறுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தான், தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார் கமல். இந்நிலையில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் மநீமவுக்கு பலனில்லை என்பதால்தான் கமல் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் என பேசப்படுகிறது.


