News November 15, 2025
ராணிப்பேட்டை: இரண்டாவது திருமணம் செய்தவருக்கு சிறை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த பார்த்திபன் (48) என்பவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. வழக்கை சிறப்பாக விசாரித்து தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பாராட்டினார்.
Similar News
News March 7, 2026
ராணிப்பேட்டை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

ராணிப்பேட்டை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!
News March 7, 2026
ராணிப்பேட்டையில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
ராணிப்பேட்டை: 7 சவரன் நகை கொள்ளை

சோளிங்கர் அருகே பரவத்துார் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (45) . இவர் கடந்த மார்ச் 4ம் தேதி அவசர தேவைக்காக பையில் 7 சவரன் நகை மற்றும் ₹13,000 பணத்துடன், பாராஞ்சியில் உள்ள தனியார் வங்கிக்கு அடகு வைக்க நடந்து சென்றுகொண்டிருந்தார் . அப்போது, கோகிலாவை பின் தொடர்ந்து, டூ வீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு அவரது பையை பறித்து சென்றனர்.இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


