News November 15, 2025

சேலம் அருகே சோகம் இளம்பெண் மரணம்!

image

காடையாம்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் இளம் பெண் சடலம் கிடப்பதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகள் மஞ்சு ஸ்ரீ என்பதும் 19 வயதான அவர் ஏன் எப்படி கிணற்றில் இறந்து கிடந்தார். என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News March 16, 2026

சேலம்: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

சேலம் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 16, 2026

சேலம்: தவெகவில் இணைந்தனர்

image

சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் இன்று அக்கட்சியிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தனர். சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக இணைந்தவர்களுக்கு அவர் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். தேர்தல் நெருங்கும் வேளையில் மற்ற கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2026

BREAKING:சேலம் கன்னங்குறிச்சியில் மூதாட்டி கற்பழிப்பு!

image

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்ணங்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (26) மற்றும் பொன்வேல் (55) ஆகிய இருவரும் மூதாட்டியைப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!