News November 15, 2025
அனைத்து தோஷத்தையும் நீக்கும் விநாயகர் வழிபாடு!

ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில், விநாயகர் படத்தின் முன், ஒரு தட்டில் முழுவதுமாக அருகம்புல்லை பரப்பி வைக்கவும். அதன் மேல், அகல் விளக்கில், தேங்காய் எண்ணெய் ஊற்றி கிழக்கு திசை பார்த்தவாறு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ‘ஓம் கணேசாய நமஹ’ என்ற மந்திரத்தை 54 முறை உச்சரிக்கவும். விளக்கு குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு, அருகம்புல்லை விநாயகரின் படத்துக்கு போட்டு விடலாம். SHARE IT.
Similar News
News November 15, 2025
BREAKING: கொந்தளித்தார் விஜய்

மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைப்பதில்லை என்று விஜய் கொந்தளித்துள்ளார். இதுதொடர்பாக ECI-க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான தவெகவை அழைக்காமலேயே ஆலோசனை கூட்டங்களை நடத்துவது ஜனநாயகம் ஆகாது. எனவே, இனி நடைபெறும் ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 15, 2025
ஜம்மு காஷ்மீர் வெடிவிபத்து தற்செயலானது: DGP விளக்கம்

J&K நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்து தற்செயலாக நடந்தது என அம்மாநில டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்துள்ளார். ஃபரீதாபாத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகளை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். இதில், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 15, 2025
10 ஆண்டுகளாக Bank Account யூஸ் பண்ணலையா?

10 ஆண்டுகளை கடந்தும் எந்த பரிமாற்றமும் இல்லாத வங்கிக் கணக்குகளை ‘UDGAM’ என்ற போர்ட்டல் மூலம் மீட்டெடுக்கலாம். வாடிக்கையாளர் (அ) சட்டப்பூர்வ வாரிசுகள், தங்களது மொபைல் எண், பயனர் பெயரை உள்ளிட்டு தகவலை பெற்று, பணத்தை எடுக்கலாம். அதேநேரம், நேரடியாக வங்கிகளுக்கு சென்று ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவதொரு அடையாள அட்டையை சமர்ப்பித்தும் பணத்தை பெறலாம்.


