News November 15, 2025
20-ம் தேதி வரை மழை வெளுக்கும்

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, தமிழத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த 3 நாள்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 15, 2025
KTR-க்கு நாவடக்கம் தேவை: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு தேவையில்லை, கட்சியை கலைத்துவிடுங்கள் என <<18292742>>KT.ராஜேந்திர பாலாஜி<<>> பேசியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பற்றி KTR-க்கு ஒன்றுமே தெரியாது எனக் கூறிய அவர், காங்கிரஸ் யானையை போல, எப்போது வேண்டுமானாலும் எழும் என தெரிவித்துள்ளார். மேலும், KTR-க்கு நாவடக்கம் தேவை எனவும், அவர் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 15, 2025
திருப்போரூர் விமான விபத்து: கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

திருப்போரூர் அருகே IAF-க்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் <<18285986>>வெடித்துச்<<>> சிதறியது. இதிலிருந்த விமானி பாராசூட் மூலம் உயிர்தப்பிய நிலையில், சிகிச்சையில் உள்ளார். நேற்று மாலை முதல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வந்த IAF அதிகாரிகள், தற்போது விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து, வெடித்துச் சிதறிய விமான உதிரி பாகங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
News November 15, 2025
தினமும் தயிர் சாப்பிடலாமா?

சிலர் எல்லா பருவத்திலும் தினமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். அது சரியா என கேட்டால், மிகவும் சரியான விஷயம் என்கின்றனர் டாக்டர்கள். தினமும் அளவோடு தயிர் சாப்பிட்டால் *ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *உடல் எடையை குறைக்க உதவுகிறது *எலும்பின் உறுதி தன்மையை அதிகரிக்கும் *தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் *சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.


