News November 15, 2025

ஆணவக்கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

image

கிருஷ்ணகிரியில் சாதி மறுப்பு திருமணம் செய்த தனது மகனை கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஏப்ரலில் நடந்த இந்த சம்பவத்தில், ஊருக்கு வந்த தனது மகன் சுபாஷ், மருமகள் அனுசயாவையும் தண்டபாணி வெட்டினார். அப்போது, தடுக்க வந்த தனது தாயார் கண்ணம்மாவையும் வெட்டினார். இதில், மகனும், தாயாரும் உயிரிழந்த நிலையில், மருமகள் அனுசயா படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.

Similar News

News March 26, 2026

பாஜக கையில் ஊட்டி.. அதிமுகவினர் அதிருப்தி

image

உதகமண்டலம் (ஊட்டி) தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதால், அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி தொகுதியின் வேட்பாளர் தான் என நீலகிரி அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளை செய்து வந்தார். ஆனால், திடீர் திருப்பமாக அந்த தொகுதியை பாஜகவுக்கு இபிஎஸ் கொடுத்துவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், தலைமைக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்

image

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு www.truecaller.com இணையதளத்துக்கு செல்லுங்கள். ➤இதில் ’i want to unlist’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் ➤நம்பரை உள்ளிட்டால் உங்கள் Contact Truecaller-ன் தரவுகளில் இருந்து நீங்கிவிடும். ஒருவேளை உங்கள் போன் நம்பர் வேறு ஒருவரின் பெயரில் இருந்தால், அதனை Change My Name என்ற ஆப்ஷன் மூலம் மாற்றலாம். SHARE.

News March 26, 2026

ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை?

image

பாஜக சார்பில் யார் யார் வேட்பாளர்கள் என்பது தொடர்பாக, சென்னையில் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் பாஜகவுக்கு ஒரே ஒரு தொகுதி அதிமுக ஒதுக்கி உள்ளது. அதிலும் வானதி போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலை இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!