News April 20, 2024
விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45,509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனக் கூறியுள்ள அதிகாரிகள், அதன் பிறகு உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.
Similar News
News August 18, 2025
BREAKING: சிபிஐ மாநில செயலாளர் தேர்வு ஒத்திவைப்பு

சிபிஐ (CPI) மாநில செயலாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ-ன் 26-வது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று நகரின் முக்கிய வீதிகளில் செம்படை பேரணி நடைபெற்றது. முன்னதாக, முத்தரசனின் பதவிக் காலம் நிறைவடைவதால் மூ.வீரபாண்டியன், சந்தானம் இருவரில் யாரேனும் ஒருவர், புதிய மாநில செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
News August 18, 2025
கவனமா இருங்க.. இப்படியும் ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க!

எந்தளவிற்கு தனிநபர் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு மோசடிகளும் அதிகரித்து கொண்டே போகின்றன. தற்போது வலைத்தளங்கள், மின்னஞ்சல்களின் மூலம் ‘Fake Captcha Scam’ ஒன்று பரவி வருகிறது. பயனர்கள் அதில், Tick செய்தால் போதும், கணினியில் உடனே Malware டவுன்லோட் ஆகி, மொத்த டேட்டாவையும் திருடி விடுகிறது. தெரியாத வலைத்தளங்களில் Browsing செய்யும் போது, பயனர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 18, 2025
நடிகர் கோட்டா சீனிவாச ராவின் மனைவி ருக்மிணி காலமானார்

பிரபல தமிழ் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த மாதம் மறைந்த நிலையில், இன்று(ஆக.18) அவரது மனைவி ருக்மிணி காலமானார். கணவரின் மறைவுக்கு பிறகு மன உளைச்சலால் உடல்நலக்குறைவுக்கு ஆளான அவர் ஹைதராபாத்தில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2010-ல் சாலை விபத்தில் இவர்களது மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் பலியானது குறிப்பிடத்தக்கது.