News November 14, 2025

BREAKING: நடிகர் அஜித்குமார் இணைந்தார்

image

ரிலையன்ஸின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான CAMPA எனர்ஜியுடன்(RCPL) இணைந்திருப்பதை AK ரேஸிங் அணி அறிவித்துள்ளது. அஜித் போட்டோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட AK ரேஸிங் அணி, இது ஆரம்பம்தான் எனத் தெரிவித்துள்ளது. தங்களது நோக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு RCPL-க்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த பார்ட்னர்ஷிப் இந்தியன் மோட்டார் ஸ்போர்ட்டை உலகளவில் எடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News March 22, 2026

விஜய்யுடன் கூட்டணியா… முடிவை அறிவித்த வேல்முருகன்

image

தவெக ஒரு அரசியல் புரிதலற்ற கட்சி என வேல்முருகன் விமர்சித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் சமூகநீதி வரலாறு குறித்து எந்த தெளிவும் அற்ற இளைஞர்களை கொண்ட கட்சியாக தவெக இருக்கிறது என அவர் சாடியுள்ளார். வரும் தேர்தலில் தவெகவுடன் தவாக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

News March 22, 2026

படுக்கைக்கு அழைப்பு.. பிரபல நடிகை பகீர்

image

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெலுங்கு நடிகை ஸ்ரீ சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார். மிஸ் விஜயவாடா அழகி பட்டம் வென்று சினிமாவில் அறிமுகமான அவர், பிக்பாஸில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், சினிமா இண்டஸ்ட்ரியில் ‘அட்ஜஸ்மெண்ட்’ தொல்லை இருந்ததால் சீரியல் பக்கம் திரும்பியதாக குறிப்பிட்ட அவர், நடிப்பில் கவனம் செலுத்தும் பெண்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News March 22, 2026

கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

image

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!