News November 14, 2025

மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கிய ஆட்சியர்

image

கட்டளை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (நவ.14) தேதி ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வு செய்தார் .அப்போது குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் சந்திரகலா சாக்லேட் வழங்கினார்.மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எவ்வாறு எடுக்கிறார். மாணவர்களின் கற்றல் மற்றும் எழுதும் திறன் எப்படி உள்ளது என்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Similar News

News March 13, 2026

ராணிப்பேட்டை பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

News March 13, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்தொடர்பான குறைதீர் முகாம் நாளை(மார்ச் 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் இருந்தால் கலந்துகொண்டு பயனடையலாம். ரேஷன் கடை மீது புகார்கள் இருந்தாலும் இதில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

ஆற்காடு அருகே 2 இளைஞர்கள் துடிதுடித்து பலி!

image

ஆற்காடு – மேல்விஷாரம் சாலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்த விபத்தில் அமீன் பாஷா மற்றும் ஏஜாஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளான சாதிக் பாஷா மற்றும் இம்தியாஸ் ஆகியோரின் உறவினர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!