News November 14, 2025

ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு விருது!

image

2024-25 ஆம் ஆண்டிற்கான ஈரோடு மாவட்டத்தின் சிறந்த 3 தொடக்கப்பள்ளிகளில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளியும் தேர்வாகி உள்ளது. அதற்கான விருது மற்றும் கேடயம் வழங்கும் விழா காரைக்குடியில் இன்று (நவ.14) நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விருது மற்றும் கேடயங்களை வழங்கினார்.

Similar News

News March 11, 2026

ஈரோட்டில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News March 11, 2026

ஈரோடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

ஈரோடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 11, 2026

ஈரோடு: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

image

ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் சேர்ந்த சின்னத்தம்பி (58), அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்திலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த இவர், ஓபிஎஸ் அணிக்குச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பிய அவருக்கு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

error: Content is protected !!