News November 14, 2025
கெத்தாக நிற்கும் நிதிஷ்குமார்

2025 பிஹார் தேர்தலின் நாயகன் என்றால் அது நிதிஷ்குமார்(74) தான். அவரின் JD(U) கட்சி 2015-ல் 71 இடங்கள் வென்ற நிலையில் 2020-ல் 43 ஆகச் சுருங்கியது. அடிக்கடி கூட்டணி மாறினாலும் 19 ஆண்டுகளாக CM பதவியை பிடித்துக் கொண்டிருக்கும் நிதிஷ் 9-வது முறையாக அரியணை ஏறப்போகிறார். ஆனால், இந்த முறை 80-க்கு மேற்பட்ட இடங்கள் வென்று கெத்தாக CM ஆகிறார். அனைத்து தரப்பினர் ஆதரவு, பெண்களிடம் செல்வாக்கு இவரது பெரும்பலம்.
Similar News
News November 15, 2025
ராசி பலன்கள் (15.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 15, 2025
செண்பகப் பூவாய் சிவப்பு சேலையில் ருஹானி

கடைசி பென்ச் கார்த்தி படத்தின் மூலம் அறிமுகமான ருஹானி ஷர்மா, அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். ‘மாஸ்க்’ திரைப்படம், வரும் நவம்பர் 21ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 15, 2025
தேர்தலில் படுதோல்வி: வைரலாகும் PK மீம்ஸ்

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் (PK) ஜன்சுராஜ் கட்சி, தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. இதையடுத்து ‘ஜீரோ வென்ற PK’ என மீம்களை பறக்க விடுகின்றனர் வடமாநில நெட்டிசன்ஸ். ஒரு மீமில் பெட்ரோல் பம்ப்பை கையில் பிடித்துள்ள PK, ‘செக் பண்ணுங்க ஜீரோ, ஜீரோ’ என்பது போலவுள்ளது. இன்னொன்றில், பிளேடு எடுத்துக் கொடுக்கும் லாலு, ‘இந்தா நரம்பை கட் பண்ணிக்கோ..’ என்று சொல்வது போலவுள்ளது.


