News November 14, 2025
கடலூர்: நாளை மின்தடை ரத்து

கடலூர் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் நாளை டெட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 908 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை(நவ.15) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெட் தேர்வு காரணமாக மின்தடை மாவட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
கடலூர்: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள்<
News March 7, 2026
அரசுக்கு கண்டனம் தெரிவித்த MLA

பண்ருட்டி MLA வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக கேரள எல்லைப் பகுதியில், கூடலூர் அருகே தமிழக அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு ஒருதலைப்பட்சமாக எல்லை அறிவிப்புப் பலகைகளை நட்டுள்ள செய்தி, பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அண்டை மாநிலங்கள் பேண வேண்டிய கண்ணியத்தையும், ஜனநாயக மரபுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இச்செயலை தவாக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்தார்.
News March 7, 2026
விருத்தாசலம் டிஎஸ்பி-க்கு சான்றிதழ் வழங்கிய எஸ்பி

கடலூர் மாவட்டத்திலேயே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து பிடிப்பதில் சிறந்த போலீஸ் நிலைய உட்கோட்டமாக விருத்தாசலம் உட்கோட்டமும், சிறந்த போலீஸ் நிலையமாக விருத்தாசலம் போலீஸ் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேற்று விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


