News November 14, 2025
முகத்துக்கு கடலை மாவு போடுறீங்களா? உஷார்!

முக அழகை பராமரிக்க பலரும் கடலை மாவை பயன்படுத்துகின்றனர். என்னதான் இது முகத்தை மிருதுவானதாக மாற்றினாலும், இதை அடிக்கடி பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். வாரத்திற்கு 2-3 முறை கடலை மாவை அப்ளை செய்தால் சருமம் வறண்டு போகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள் போதும். பலருக்கு தெரியாது, SHARE THIS.
Similar News
News November 14, 2025
புத்திசாலி கிளிகளின் இந்த குணங்கள் தெரியுமா?

பூமியில் வாழும் உயிரினங்களில், கிளிகள் மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் திறன்கள் கொண்டவை. மனிதர்களுடன் நெருக்கமான பந்தம், கிளிகளின் ஆழமான உணர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை நம்மை வியப்படைய செய்கிறது. கிளிகள் குறித்து சில அழகான தகவல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கும் கிளிகள் பிடிக்கும் என்றால் SHARE பண்ணுங்க.
News November 14, 2025
காங்கிரஸை மிஞ்சிய AIMIM

பிஹார் தேர்தலில் ஒவைஸியின் AIMIM கட்சி 4 இடங்களை வென்றுள்ளது. ஆம்ரோ தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் அக்தருல் இமான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கொச்னாதமன், ஜோகிஷாத், பகதூர்கஞ்ச் ஆகிய இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் காங்கிரஸுக்கு இப்படி ஒரு நிலையா என பலரும் SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.
News November 14, 2025
இயக்குநரும் நடிகருமான வி.சேகர் மரணம்.. அஞ்சலி

சினிமா இயக்குநரும் நடிகருமான வி.சேகர்(72) உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிர்பிரிந்தது. போரூர் ஹாஸ்பிடலில் உள்ள அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வி.சேகரின் உடல் நாளை(நவ.15) கோடம்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. RIP


