News April 20, 2024
தூர்தர்ஷன் முழுவதுமே காவிமயம்

தூர்தர்ஷனின் லோகோ, சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஊடக வல்லுநர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவகர் சிர்கார், லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன எனப் பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 12, 2025
டெல்லியில் முழுமையான குண்டு வெடிக்கவில்லை

டெல்லி கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் அல்ல என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருள் சிக்கியதால், தன்னிடம் உள்ள வெடிபொருளும் சிக்கிவிடுமோ என்ற அச்சத்தில், குண்டு ஆரம்ப நிலையில் இருந்த போதே, உமர் அதை வெடிக்க வைத்துள்ளார். முழுமை பெற்ற குண்டு வெடித்திருந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
News November 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 517 ▶குறள்: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். ▶பொருள்: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
News November 12, 2025
ஏழுமலையான் பக்தர்களுக்கு மெகா அன்னதானம்: அம்பானி

திருப்பதியில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் வகையில், அதிநவீன சமையல் கூடத்தை அமைத்து தர உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான, ஊட்டச்சத்து மிகுந்த பிரசாதத்தை வழங்க தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


