News November 14, 2025

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

image

பிஹார் தேர்தல் வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்தது என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மக்களுக்கு தனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தீர்ப்பு மேலும் உறுதியாக சேவையாற்ற உந்துதல் தரும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை உள்ளது.

Similar News

News November 14, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை… இனிமேல் கிடைக்காது

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இனிமேல் தகுதியான மகளிர் கூட விண்ணப்பிக்க முடியாது. அனைத்து மாவட்டங்களிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், மனுக்களை பரிசீலிக்கும் பணி நவ.30-ம் தேதிக்குள் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தகுதியானோருக்கு டிச.15-ம் தேதி முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படும்.

News November 14, 2025

கெத்தாக நிற்கும் நிதிஷ்குமார்

image

2025 பிஹார் தேர்தலின் நாயகன் என்றால் அது நிதிஷ்குமார்(74) தான். அவரின் JD(U) கட்சி 2015-ல் 71 இடங்கள் வென்ற நிலையில் 2020-ல் 43 ஆகச் சுருங்கியது. அடிக்கடி கூட்டணி மாறினாலும் 19 ஆண்டுகளாக CM பதவியை பிடித்துக் கொண்டிருக்கும் நிதிஷ் 9-வது முறையாக அரியணை ஏறப்போகிறார். ஆனால், இந்த முறை 80-க்கு மேற்பட்ட இடங்கள் வென்று கெத்தாக CM ஆகிறார். அனைத்து தரப்பினர் ஆதரவு, பெண்களிடம் செல்வாக்கு இவரது பெரும்பலம்.

News November 14, 2025

இனி RJD ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை: PM மோடி

image

பிஹார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிஹாரில் இருந்து முற்றிலுமாக RJD நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இனி அவர்களின் ஆட்சி மீண்டும் வர வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இஸ்லாமியர்கள், யாதவர்கள் கூட்டணியில் வெற்றி பெறலாம் என நினைத்ததாகவும், ஆனால் நாம் பெண்கள் மற்றும் இளைஞர்களால் வெற்றி பெற்றுள்ளோம் எனவும் மோடி கூறியுள்ளார்.

error: Content is protected !!