News November 14, 2025

வாக்குகளை பிரித்தாரா ஒவைஸி?

image

பிஹார் தேர்தலில் ஒவைஸியின் AIMIM கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியிலும் சேராமல், ஆளும் கூட்டணியுடனும் இணையாமல் போட்டியிடுவது இவரின் வழக்கமாக உள்ளது. முஸ்லிம்கள் மெஜாரிட்டி உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இவர், முஸ்லிம் வாக்குகளை பிரித்துவிட்டதும் பல தொகுதிகளில் MGB கூட்டணி தோல்விக்கு காரணம் எனப்படுகிறது.

Similar News

News November 14, 2025

SIR பணிகளில் குளறுபடி செய்யும் திமுக: EPS

image

தமிழக அரசின் தலையீட்டால் SIR பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். ECI விழிப்போடு இருந்து அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். போலி வாக்காளர்களை நீக்க SIR முறையாக நடக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே அதில் குளறுபடி செய்ய திமுக முயல்வதாகவும் சாடியுள்ளார்.

News November 14, 2025

முகத்துக்கு கடலை மாவு போடுறீங்களா? உஷார்!

image

முக அழகை பராமரிக்க பலரும் கடலை மாவை பயன்படுத்துகின்றனர். என்னதான் இது முகத்தை மிருதுவானதாக மாற்றினாலும், இதை அடிக்கடி பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். வாரத்திற்கு 2-3 முறை கடலை மாவை அப்ளை செய்தால் சருமம் வறண்டு போகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள் போதும். பலருக்கு தெரியாது, SHARE THIS.

News November 14, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

image

டெட் தேர்வு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், சில வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்படும். ஆனால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வையொட்டி, புதுச்சேரியிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!