News November 14, 2025
உதிரி கட்சியாக இருக்கக்கூட ADMK-க்கு தகுதியில்லை: CM

SIR-க்கு எதிராக திமுக SC-ல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், SIR-க்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் அதிமுக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு SIR தொடர்பான நிபந்தனைகளை அதிமுக ஏற்று கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். அதிமுகவிற்கு எதிர் கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News March 11, 2026
₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News March 11, 2026
‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’

மும்பையில் காதலன் கொடுத்த மென்டல் டார்ச்சரால், 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக புத்தி கொண்ட காதலன், மாணவி ஸ்துதி சோனாவானேவை(24) தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணருங்கள் நண்பர்களே!
News March 11, 2026
போர் எதிரொலி.. தீப்பெட்டி விலை உயர்ந்தது

தீப்பெட்டி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான Paraffin Wax-ஐ (மெழுகு) ஈரானிடம் இருந்து இந்தியா அதிகளவில் வாங்கி வந்தது. போர் காரணமாக ஈரானில் இருந்து இந்தியாவிற்கு மெழுகை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு கிலோவுக்கு ₹80-ல் இருந்து ₹130 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கோவில்பட்டியில் உற்பத்தியாகும் தீப்பெட்டி பண்டல் ஒன்றின் விலை ₹20 ஆக உயர்ந்துள்ளது.


